சென்னை, மே 18- உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது அய்ந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் அய்ந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது.
இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பத்தாண்டுகள் ஒன்றியத்தில் பாஜகவும், உத்தரப்பிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ் எஸ் வட்டாரங்களில் அமைதியின்மை பரவியுள்ளது. ஒன்றிய, மாநில அரசாங் கம் “அவர்களுடையது” என்ற போதி லும், தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணி களை செய்யவில்லை. அப்படி இருக்கத் தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப் படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்றத் தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லா மிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர் எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.
குஜராத்தை தொடர்ந்து தற்போது உத்தரப் பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ் எஸ் நிர்வாகிகள் செய்யாமல் போக பல்வேறு காரணங்கள் சொல்லப்படு கின்றன. அந்த காரணங்களை இங்கே பார்க்கலாம்.
1. ஆர்எஸ்எஸ் தரப்பு மோடியின் தனிப்பட்ட வளர்ச்சியை விரும்ப வில்லை என்று கூறப்படுகிறது. பாஜக வின் ஆர்எஸ்எஸ் குரல் இல்லாமல் போய்விட்டது. ஆர்எஸ்எஸ் அமைப் பிற்கு பாஜகவில் எப்போதும் வாய்ஸ் இருக்கும். அது மோடி வருகையால் இல்லாமல் போய்விட்டது.
2. ஆர்எஸ்எஸ் முடிவுகளை மோடி. – அமித் ஷா இருவரும் கேட்பது இல்லை. இருவரும் சுயமான முடிவுகளை எடுக்கின்றனர். இப்போது வேட்பாளர் தேர்வில் கூட ஆர்எஸ்எஸ் குரல் கேட்பது இல்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அப்செட் ஆகி உள்ளது. இது களப்பிரச்சாரத்திலும் சுணக்கம் ஏற்பட காரணம் ஆகி உள்ளது.
3. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலருக் கும் – உள்ளூர் உத்தரப் பிரதேச வேட் பாளர்களுக்கும் செட்டாகவில்லை. இதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. முக்கியமாக ஆர்எஸ்எஸ் பிரிவில் உள்ள ராஜ்புத் ஜாதியினர் உத்தரப் பிரதேச வேட்பாளர் தேர்வை முடிவு எடுக்கவில்லை. இது பாஜகவிற்கு அதிர்ச்சியாக மாறி உள்ளது.
4. உத்தரப் பிரதேசத்தில் ஆர்எஸ் எஸ் மோடியை விட யோகியை அதிகம் விரும்புகிறது. இப்போது மோடி பிரதமர் ஆனால்.. 4ஆம் முறை பாஜக 2029இல் மீண்டும் வெல்வது கடினம். 2029இல் யோகியை முன்னிறுத்தினால் பாஜக மீதுள்ள அதிருப்தியால் யோகி தோற்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதுவே இப்போது மோடி தோல்வி அடைந்தால்.. அடுத்த முறை யோகியை புதிய முகமாக களமிறக்கி பாஜக 2029ல் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும் என்ற திட்டத்தை வகுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
5. இதன் மூலம் பாஜக ஆட்சியில் ஆர்எஸ்எஸ் வாய்ஸ் இருக்கும். இப் போது பாஜக சறுக்கினால் மீண்டும் ஆர்எஸ்எஸ் குரல் பாஜகவில் உயரும். மோடி – அமித் ஷா என்ற இரண்டு பேரின் குரல் மட்டும் பாஜகவில் கேட்காமல் பலதரப்பட்ட குரல்களுக்கு மதிப்பு இருக்கும் என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதாம்.
6. அதோடு இல்லாமல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பாஜக ஆட்சியில் பெரிதாக பலன் அடையவில்லை., பாஜக தலை கள் அடைந்ததை போன்ற பலனை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அடைய வில்லை. எங்கள் மனம் நொறுங்கிவிட் டது என்று ஆர்எஸ்எஸ் உள்ளூர் நிர் வாகிகள் குமுறுகின்றனர். இதனால் தான் உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பெரிதாக வேலைகளை செய்யவில்லை யாம்.
– சமூக வலைத்தளத்திலிருந்து