சென்னை, மே 18- தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு மே 5ஆ-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
நேற்று (17.5.2024) மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 448 மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண் ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 815 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத் தியுள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பொறியியல் படிப் புகளில் சேர நேற்று மாலை6 மணி வரை, ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் விண்ணப் பித்துள்ளனர் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புரு ஷோத்தமன் தெரிவித்தார்.