சென்னை, மே 18– அம்பத்தூர் அரசு மகளிர் அய்டிஅய்.யில் மாத உதவித் தொகையுடன் பல்வேறு தொழிற்பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. இதில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித் தார்த் ஜகடே நேற்று (17.5.2024) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (அய்டிஅய்) 2024-2025 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை மே 10ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
இங்கு ஓராண்டு கால தையல் தொழில்நுட்பம், தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலின்(NCVT) கம்ப் யூட்டர் ஆபரேட்டர் – புரோ கிராமிங் அசிஸ்டென்ட் (‘கோபா’) பயிற்சி, சுருக்கெழுத்து (தமிழ், ஆங்கிலம்), 2 ஆண்டு கால கட்டட பட வரைவாளர் படிப்புகள் வழங் கப்படுகின்றன.
வயது வரம்பு கிடையாது: தையல் படிப்பில் சேர 8ஆ-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற படிப்புகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது வரம்பு கிடையாது.
பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும்.
6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகள் கூடுதலாக ரூ.1,000 உதவித் தொகை பெறலாம். இலவச பேருந்து அட்டை, சைக்கிள், பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள், 2 செட் சீருடைகள், ஷூ ஆகியவையும் வழங்கப்படும்.
படித்து முடித்தவுடன் சிறந்த தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் (டிசி), சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ் போர்ட் அளவு புகைப்படங்கள்-5 ஆகியவற்றை எடுத்துவர வேண் டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.50. நேரில் வர இயலாதவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.