கேட்கிறார் கேரள மாநிலப் பெண் ஷீஜா. “கள் இறக்குவதெல்லாம் எங்களால் மட்டுமே முடியும்” என்று மார்பைத் தட்டிக்கொள்ளும் ஆண்களுக்குச் சவாலாக 2019ஆம் ஆண்டு முதல் கள் இறக்குவதை அன்றாடத் தொழிலாகவே செய்து வருகிறார். கூத்துப்பரம்பரா எனும் சிற்றூருக்கருகில் உள்ள பன்னியோடே கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஷீஜா.
இந்தத் தொழில் ஈடுபட்டுள்ள முதல் பெண் இவர்தானாம் கேரள மாநிலத்தில்.
ஆபத்தை உணர்ந்தும் அஞ்சாமல் அவர் புன்னகைப்பதைப் பாருங்கள். நாற்பதடி உயர பனை மரங்களில் ஏறி இறங்கி வருகிறார். இதற்காக முறைப்படி உரிமம் பெற்றுள்ளார் இவர். நாள்தோறும் குறைந்தபட்சம் பத்துப் பனை மரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றின் மீதும் மூன்று முறையாம்!
நவீனக் கருவிகள் எதையும் உபயோகிப்பதில்லை ஷீஜா. தென்னங்கீற்றுகளால் பின்னப்பட்ட ஓர் ஏணியை வைத்துக்கொண்டு சமாளிக்கிறார். ஆண்களுக்கு நிகராக பெண்கள் உயர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் தந்தை பெரியார். ஒரு விதத்தில் இந்த ஷீஜாவும் உச்சத்தை அடைந்து வருகிறார் நாள்தோறும் – பனை மரத்தின் மீது மட்டுமல்ல; தன் வாழ்விலும்தான்.