எம்.ஆர்.மனோகர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சீதாபுர் எனும் சிற்றூரில் வாழும் இளம் பெண் பிராச்சி நிகாம் (Prachi Nigam) சமீபத்தில் அங்கு நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் 98.50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.
இயற்கையின் கோணல் புத்தியால் இவருடைய உதடுகளுக்கு மேல் சற்று அடர்த்தியாகவே மீசை நீண்ட காலமாகவே உள்ளதாம். சமூக வலை தளங்களில் வெளியான இவருடைய தோற்றத்தைக் கண்டு கேலி செய்தவர்கள் பலர். ஆனால், இந்தப் பெண் அதைப் பற்றி கவலையே படவில்லை.
ஒரு சில நல விரும்பிகள் இவரை அழகு நிலையங்களுக்குச் சென்று நிரந்தரமாக தீர்வு காண அழைத்துள்ளனர். பிராச்சி சம்மதிக்க வில்லை. “எனக்கு அழகைவிட அறிவே முக்கியம். உயர்கல்வி பெற்று செயற்கை நுண்ணறிவுப் பொறியாளராவதே என் லட்சியம். என் வெற்றியே என் அடையாளம்” என்கிறார் இவர்.
இந்தப் பெண்ணின் நிலையைக் கண்ட பல மருத்துவர்கள் இலவசமாக சிகிச்சை அளிக்க முன்வந்தும் இணங்க மறுத்துவிட்டார் இவர்.
நிரந்தரமில்லாத அழகைப் பாது காக்க அழகு நிலையங்களுக்குப் படை யெடுத்து பணத்தை விரயமாக்கும் பெண்கள் அனைவருக்கும் இந்தப் பெண் ஒரு பாடம்!