அரூர், செப். 6 – தர்மபுரி மாவட்டம், அரூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணியம்மையார் கல்வி நிறு வனம் சார்பில் 25.8.2023 ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அரூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பெற்றோர் – ஆசிரியர் கழக தலைவரும், திமுக மாநில ஆதிதிராவிடக் குழு துணை செயலாளரும், மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவருமான சா. இரா ஜேந்திரன் தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் பழ. பிரபு, மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட தலைவர் கு.தங்க ராஜ், மாவட்ட செயலாளர் சா.பூபதி ராஜா, கழக காப்பாளர் அ. தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், மாவட்ட மாண வர் கழக தலைவர் இ.சமரசம், கவிஞர் பிரேம்குமார் முன்னி லையில், முதுகலை ஆசிரியர் சின்னக்கண்ணன் வரவேற்று ஒருங்கிணைத்து நடத்தினார்.
தலைமையாசிரியர் இராணி கருத்துரை ஆற்றி னார். திரா விடர் கழக மாநில பொருளாளர் வீ.குமரேசன் தொடக்க உரை யாற்றினார்.
நிறைவாக கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் அன்றைய கல்வியும், மாணவர்களின் ஏழ்மை நிலை யும் இன்றைக்கு மாணவர்க ளுக்கு கல்வியை வளர்க்க அரசு மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது குறித்தும் பட்டியலிட்டு பேசிய துடன், மாணவிகளின் இன் றைய கல்வி நிலை வாழ்வியல் சிந்தனை, அறிவியல் முன் னேற்றம், அறிவியல் கல்வி, தொழில் தொழில்நுட்பம், ஆகியவை பற்றி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் அவர் கூறுகையில் 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டில் அரூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் மூன்று இடங்களில் ஓர் இடத்தைப் பெற வேண்டும், மாணவிகளால் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே முதல் மூன்று இடங் களில் ஒரு இடத்தைப் பெற்று பரிசு வழங்க மீண்டும் இந்த பள்ளிக்கு வருவேன் என்று பேசிய போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளும் ஆசிரியர்களும் கைதட்டி வர வேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியை சத்தியலட்சுமி, வினோதினி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சண்முகம், ஒன்றிய பகுத்தறிவாளர்களாக செயலாளர் குமரேசன், நகர செயலாளர் துரைராஜ், பிள வங்கன், விண்ணரசு, வேப்ப நத்தம் சுய உதவி குழு கல்பனா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியாக ஆசிரியர் அண்ணா துரை நன்றி கூறினார்.