நாகர்கோவில், செப். 6 – அறிவியல் பிரச்சாரத்தை செய்ததற்காக மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்ட பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம், அறியாமையை நீக்குவோம் என்ன தலைப்பில் கருத்தரங்கம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. குமரி மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார்.
திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். மாநகர துணைத்தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது கடவுள் மறுப்புக் கூறினார். திராவிடர்கழக இலக் கிய அணி செயலாளர் பா.பொன்னு ராசன், இலக்கிய ஆய்வாளர் சி. காப்பித்துரை ஆகியோர் கருத்து ரையாற்றினர். கழக காப்பாளர் ஞா. பிரான்சிஸ், திராவிடர்கழக மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் கழகத் தோழர் அர்ஜூன் மற்றும் பலரும் பங் கேற்றனர். மதவெறியர்களால் படு கொலை செய்யப்பட்ட பகுத்தறி வாளர்கள் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷ்,கோவிந்த் பன்சாரே ஆகியோருக்கு இந்த கூட்டத்தில் வீரவணக்கம் செலுத் தப்பட்டது.