வேலூர், மே 17 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம், கழனிப்பாக்கம் கிராமம் வள்ளுவர் வீதியில், அணைக்கட்டு ஒன்றிய கழக சார்பில் 4.5.2024 அன்று மாலை 6 மணிக்கு “சுய மரியாதை இயக்க நூற்றாண்டு விழா” – “குடிஅரசு” நூற்றாண்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு ஒன்றிய கழக அமைப்பாளர் கழனிப்பாக்கம் பொ.இரவிந்திரன் தலைமை தாங்கினார். குடியேற்றம் நகர கழகத் தலைவர் சி.சாந்தகுமார் வரவேற்புரையாற்றினார். வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ்தரணி இணைப்புரையாற்றினார். வேலூர் மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் உ.விசுவநாதன், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் துணைத் தலைவர் க.சையத் அலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட காப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான வி.சடகோபன் தொடக்க வுரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர், அண்ணா சரவணன், கழக மாநில மகளிரணி செயலாளர், தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் நீதிக்கட்சியின் சாதனைகளை விளக் கிக் கூறி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயற்குழு உறுப்பினர், சி.பி.அய்.எம் கே.சாமிநாதன், மாவட்ட குழு உறுப்பினர், சி.பி.அய்.எம் பி.குணசேகரன், மகளிர் சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர் என்.சுமதி, மகளிர் சுய உதவிக் குழுத் தலைவர் டி.கவுரி, தமிழ்நாடு அறி வியல் இயக்கம், கழனிப்பாக்கம் இணைச் செய லாளர் எம்.பிரபு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கழனிப்பாக்கம் கிளை செயலாளர் டி.நவீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில், அறிவாசான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய தன் நோக்கம்பற்றியும், குடிஅரசு இதழின் முக்கியத் துவம் குறித்தும், சுயமரியாதை, சமூகநீதி, பெண்ண டிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, கல்வியின் முக்கியத்துவம், நீதிக் கட்சி வரலாறு, குலக்கல்வியை கொண்டுவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத திட்டத்தை புறந்தள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும், அத்திட்டத் தின் தீமை களையும், தமிழ்நாட்டை தாய் போல் காக்கும் தகைசால் தமிழர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராது உழைப்பு குறித் தும் விரிவாக விளக்கிப் பேசினர். நிகழ்ச்சியில் இயக்கத் தோழர் களும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும், இளைஞர்களும் கலந்து கொண் டனர். நிறைவாக குடியாத்தம் நகர கழகத் தோழர் க.பரமசிவம் நன்றியுரை கூறினார்