புவனேஸ்வர், மே 17- ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம்-பா.ஜனதா தொண் டர்கள் இடையே ஏற்பட்ட மோத லில் ஒருவர் உயிரிழந்தார். 7பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட் டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி 4 மக்களவை தொகு திகளுக்கும், 28 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.
2ஆம் கட்டமாக 5 மக்களவை தொகுதிகள் மற்றும் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத் தில் ஈடுபட்டு வருகின் றன. இந்த நிலையில் ஒடிசா வின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள சிறீகிருஷ்ண சரணாபூர் கிராமத்தில் கல்லி கோட் சட்டமன்ற தொகுதியின் பிஜூ ஜனதா தளம் வேட்பாளரும், அந்த தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான சூர்ய மணி பைத்யாவை ஆதரித்து அக்கட்சி தொண்டர்கள் 15.5.2024 அன்று இரவு பிரசாரத்தில் ஈடு பட்டனர்.
அப்போது அங்கு சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக அவர் களுக்கும், பா.ஜனதா தொண் டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கூர் மையான ஆயுதங்களால் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த மோதலில் பா.ஜனதா தொண்டரான திலீப் குமார் பஹானா (வயது 28) என்ற வாலிபர் பலியானார். மேலும் 7 பேர் பலத்த கயாம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச் சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம டைந்த பா.ஜனதாவினர் எம். எல்.ஏ. சூர்யமணி பைத்யாவின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டி ருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
மேலும் அவர்கள் எம்.எல்.ஏ. சூர்யமணி பைத்யாவையும், அவ ரது கணவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடு பட்டனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. நிலை மையை கட்டுப்படுத்த அந்த கிரா மத்தில் காவல்துறையினர் ஏராள மானோர் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த சம்பவத் துக்கு முதலமைச்சர் நவின் பட் நாயக் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கல்லிகோட்பகுதியில் நடந்த மிகவும் கெட்டவாய்ப்பான வன் முறை சம்பவம் ஆழ்ந்த வருத்தத் தையும், கவலையையும் அளிக்கிறது.
இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு நமது ஜனநாய கம் மற்றும் சமூகத்தில் இடமில்லை. இந்த சம்பவத்தை நான் வன்மை யாகக் கண்டிக்கிறேன்.
இந்தமோதலில் தங்கள் அன்புக்குரியவரை இழந்துவாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்த வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த கொடூர மான குற் றத்தை செய்தவர்கள் மீது காவல்துறை வலுவான மற் றும் முன்மாதிரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நம்புகி றேன்.
-இவ்வாறு நவின் பட்நாயக் கூறியுள்ளார்.