ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து கோயில் கட்டி உள்ளனர்.
இதில் அரசின் எவ்வித கட்டட வரைபட அனுமதியும் இன்றி கோவிலைக் கட்டி குடமுழுக்கு நடத்த உள்ளனர்.
நாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்ற வேண்டிய நீதித்துறை வளாகத்திலேயே ஆக்கிரமிப்புக் கட்டடத்திற்கு கும்பாபிஷேகமா?
ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் உடனடியாக தலையிட்டு இந்த சட்டவிரோத கட்டுமானங் களை அகற்ற வேண்டும். 19.05.2024 அன்று நடத்தப்படும் கும்பாபிஷேக விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்.
ஈரோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு கோயிலா?
Leave a Comment