கடலூர், மே 17- பண்ருட்டி அருகே 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர காலத் தில் பயன்படுத்திய செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தம்பட்டு மற்றும் தளவானூர் தென் பெண்ணையாற்றில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் மேற் புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப் பொழுது பழங்கால இரண்டு செப்பு நாண யங்களை கண்டெடுத்தனர். இது குறித்து அவர்கள் கூறுகை யில், தென்பெண்ணை ஆற்றில் கண்டறிந்த இரண்டு செப்பு நாண யங்களை ஆய்வு செய்ததில் அவை 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர காலத்தை சேர்ந்தது என்றும், நாணயத்தின் முன்பக்கத் தில் காளையின் உருவமும், பின்பக்கத்தில் தெலுங்கு எழுத்தில் தேவராயர் என்று எழுதப்பட்டுள்ளது என்று கூறினர். மேலும் பலமுறை தென்பெண்ணை ஆற்றுப்படுகை யில் ஏற்கெனவே செப்பு நாணயங்கள் மற்றும் தொல்பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. தென்பெண்ணை ஆற்றங் கரை பகுதிகளில் சங்ககாலம் முதல் விஜய நகரம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற் கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப் பட்டு வருகின்றன. தென்பெண்ணை ஆற்றுப் பகுதியில் பழங்கால மக்களின் வாழ்விடமா கவும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களாகவும் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
பண்ருட்டி அருகே 15 ஆம் நூற்றாண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு
Leave a Comment