சென்னை,செப்.6 – தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு மிழிஞிமிகி என்று பெயர் சூட் டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது.
இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தி யாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி அவர் களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும் தான் மாற்ற முடிந்திருக்கிறது.
“அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்! இவ்வாறு முதல மைச்சர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.