300 விடுதலை சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்குவோம்
தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
தஞ்சை, நவ. 20- 18.11.2013 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழக காப்பாளர் மு.அய்யனார், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை கா. குருசாமி, மாநில கிராம பிரச் சார குழு அமைப்பாளர் முனை வர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், சாலியமங் கலம் நகர தலைவர் வை.இராஜேந்திரன், தஞ்சை மாந கர துணைத் தலைவர் வன் னிப்பட்டு செ.தமிழ்செல்வன், மாநகர ப.க. செயலாளர் இரா.வீரக்குமார், திருவையாறு ஒன் றிய அமைப்பாளர் மு.விவேக விரும்பி, தஞ்சை தெற்கு ஒன் றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், அம்மா பேட்டை ஒன்றிய தலைவர் கி. ஜவகர், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் ப.சுதாகர், மாவட்ட செயலாளர் அ.அரு ணகிரி, மாவட்ட இணை செய லாளர் தி.வா.ஞானசிகாமணி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட இளைஞ ரணி தலைவர் ரெ.சுப்பிரமணி யன், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செய லாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. துணை செய லாளர் ஜெ.பெரியார் கண் ணன், மாவட்ட தொழிலாள ரணி துணை செயலாளர் இரா.இராதா, மாத்தூர் இரமேஷ், மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில மாணவர் கழக செயலாளர் இரா செந்தூரப் பாண்டியன், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக் குமார், முனைவர் வே.இராஜ வேல், மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
திராவிடர் கழக ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கியும், இயக்கத்தின் வளர்ச்சிக்கு தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை எடுத்து கூறியும், தமிழர் தலைவரின் இடைவிடாத பிரச்சார பய ணத்தின் பயன்களை எடுத்துக் கூறியும் கருத்துரையாற்றினார் இறுதியாக மாநகர இளை ஞரணி துணைத் தலைவர் அ. பெரியார்செல்வன் நன்றியுரை யாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணை செயலாளர் ஒக்கநாடு மேலையூர் அக் குமணனின் தாயார் தையல், ஒரத்தநாடு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சமயங் குடி காடுவரசுவின் தாயார் அஞ்சம்மாள், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக (நிகர் நிலை) மேனாள் துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல் பரமசிவம் புலவன் காடு ஊராட்சி மன்ற தலைவர் மாநல் மேக்கப் ஆகியோரது தந்தையார் மே.நல்லான், ஒரத்தநாடு ஒன்றிய துணை செயலாளர் தெலுங்கன் குடிக் காடு நா.பிரபு, தோழர் மலர் கொடி தாயார் கோவிந்தக்குடி தனபாக்கியம் தட்சிணா மூர்த்தி, ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் புன்னரசு வாழ்விணை யர் மலர்க்கொடி ஒக்கநாடு மேலையூர் தோழர் பிஆர் மணி தாயார் ராஜேஸ்வரி, தஞ்சை ஒன்றிய பாக்கா துணை செயலாளர் சுளியம்பட்டி ரங் கராசு ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்க லையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோருக் குப் பின் இயக்கத்தையும், இனத்தையும் வழிநடத்தி தந்தை பெரியார் கொள்கையை உலகமயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்ப டைத்து 90 வயதிலும் ஓய்வின்றி இயங்கி வருவதோடு நம்மையும் நாளும் இயக்கி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள் (டிசம்பர் 2) சுயமரியாதை நாள் விழா வினை மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில் தந்தை பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது, பொதுக் கூட்டங்கள், தெருமுனை கூட் டங்கள் நடத்துதல், மரக்கன்று நடுதல், குருதிக்கொடை வழங் குதல், உள்ளிட்ட மனிதநேய பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
இன உரிமை மீட்பு ஏடான விடுதலை நாளேட்டிற்கு சந் தாக்களை தஞ்சை மாவட்டத் தில் உள்ள அனைத்து ஒன்றிய நகர கிளைக் கழகம் பகுதி களிலும், கழகத் தோழர்கள் முக்கிய பிரமுகர்களை, பெரியார் பற்றாளர்களை சந் தித்து பெருமளவில் சந்தாக் களை திரட்டி தமிழா தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக 300 விடுதலை சந்தாக்களை வழங்குவது என முடிவு செய் யப்படுகிறது.
2023 டிசம்பர் 2 சென் னையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் தஞ்சை மாவட்டத்தின் அனைத்து கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று நமது தலைவரை வாழ்த்தி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.