சென்னை, மே 17 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவதற்காக இந்த ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மத்திய அதிகாரமளித்தல் குழுவின் கூட்டம் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தின் கீழ் இந்த 2024-_2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு 20 கோடி மனித நாட்களை அனுமதிக்கும் தொழி லாளர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
மேலும், நபர் ஒருவ ருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.319 ஊதியம் வழங்கவும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, திட்டத் தில் இருந்த நிலுவைத் தொகை உட்பட ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் நிதியை தமிழ்நாட்டுக்கு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி ஒன் றிய அரசு ஒதுக்கியது.இதைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அரசுக்கு எழு திய கடிதத்தில், ஒன்றிய அரசின் 75 சதவீதம் நிதி யான ரூ.921 கோடியே 78 லட்சத்து 22 ஆயிரம் உடன், மாநில அரசின் 25 சதவீத நிதியான ரூ.307 கோடியே 26 லட்சத்து 7,333 என ரூ.1,229 கோடியே 4 லட்சத்து 29 ஆயிரத்து 333 அய் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கும்படி தெரிவித்திருந்தார். இதை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, அந்த நிதியை பயன் படுத்த ஒப்புதல் அளித் துள்ளது. மேலும், இந்த திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு தெரிவித் துள்ள வழிகாட்டுதல் களை கண்டிப்பாக பின் பற்ற வேண்டும். மேலும் நிதி பயன்படுத்தப்பட்டத ற்கான சான்றிதழை உரிய விதிகள் படி ஒன் றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது