கான்கிரீட் கலவையைத் தயாரிக்க இன்றிய மையாதது சிமென்ட். சிமென்ட் உற்பத்தியில் அதிக அளவிலான கரியமிலவாயு வெளியிடப் படுகிறது. இது புவி வெப்பமயமாதலை அதி கரித்து, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கிறது. இதற்கு மாற்றாகப் பல்வேறு புதிய கண்டு பிடிப்புகள், தொழில்நுட்பங்கள் கான்கிரீட் தயா ரிப்பில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சமீபத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறு வனம், சிமென்ட் பயன்பாட்டைப் பாதியாகக் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக டைகால்சியம் சல்ஃபேட் (γ-சி2ஷி) எனும் வேதிப் பொருளைக் கலந்தது. பொதுவாக கான்கிரீட் உறுதி அடைவதே கான்கிரீட்டில் உள்ள நீரும், சிமென்ட்டும் இணைந்து வேதிவினை புரிவதன் வாயிலாகத் தான். இந்த வேதிவினையில் கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது.
ஆனால், -C2S,, நீரை விடுத்து சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவுடன் வினைபுரிந்து உறுதி அடைகிறது. கரியமில வாயு அதிகளவில் வெளியிடப்படுகின்ற அனல்மின் நிலையம் முதலிய இடங்களில் -C2S, கலந்த கான்கிரீட்டில் சுவர்கள், கட்டடங்கள் கட்டினால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது.
இந்த வகை கான்கிரீட் சாதாரண கான்கிரீட்டின் வலிமைக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கூடுதல் சிறப்பு.