சென்னை, மே 16- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதற்கான ஒருங் கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று (15.5.2024) வெளியாகி உள்ளது.
பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள், அதற்கு கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஜூன் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
“தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதற்கான ஒருங்கிணைந்த தொழில் நுட்ப சேவைகள் தேர்வுக்கு (நேர்முக தேர்வு அடிப்படையிலான பணியிடங் கள்) தகுதி உடையவர்களிடம் (பட்ட தாரிகள்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வுக்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள், இதுபற்றி அனைத்து தகவல்களையும் கவனமாக படித்துவிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பித்த விண்ணப்பதா ரர்கள் எழுத்த தேரவு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விதிமுறை மீறி செயல்படும் தேர்வர் களை எந்த நிலையிலும் நிராகரிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உரிமை உண்டு.
தேர்வுக்கான அறிவிக்கை வெளி யான தேதி: 15.05.2024
இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.06.2024 ( இரவு 11.59 வரை)விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படும் நாட் கள்: 19.06.2024 (அதிகாலை 12.01 முதல்) 21.06.2024 (11.59 pm) வரை விண்ணப்பங்களில் தவறுகள் இருந் தால் திருத்தம் செய்ய முடியும்-
தேர்வு 1: தமிழ் மொழி தேர்வு, பொது அறிவு மற்றும் திறன் மற்றும் மன திறன் சோதனை, இந்த தேர்வு ஜூலை 28ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடை பெறும் தேர்வு 2 (டிகிரி தரத்தில் இருக்கும்).
பிஇ, வேளாண்மை, ஹோம் சயின்ஸ், புள்ளியியல், பொருளாதாரம், சட்டம், நிர்வாக மேலாண்மை, தமிழ், ஆங்கிலம், கணிதம். அக்கவுண்டன்சி, பொது நிர்வாகம் உள்பட மொத்தம் 21 படப்பிரிவுகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் 12 முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் (ஆகஸ்ட் 15ஆம் தேதி மட்டும் தேர்வு இல்லை).
எப்படி விண்ணப்பிப்பது: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைய தள லிங்கில் உள்ளே சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எந்த பாடப் பிரிவு என்பதை உள்ளே குறிப்பிட வேண்டும்.
என்னென்ன பதவிகள் மற்றும் எத்தனை இடங்கள்: முழு விவரம் கல்லூரி உடற்கல்வி மற்றும் விளை யாட்டு இயக்குநர்.
அரசு சட்டக் கல்லூரிகள் : 22 பணியிடங்கள் மேலாளர் தரம்.மிமிமி (சட்டம்): 2 பணியிடங்கள், முதுநிலை அலுவலர் (சட்டம்), 9 பணியிடங்கள், உதவி மேலாளர்(சட்டம்) : 16 பணியிடங்கள்,
தமிழ் நிருபர் : 5 பணியிடங்கள் (தமிழ்நாடு சட்டப்பேரவை, தலைமை செயலகப் பணி)
ஆங்கில செய்தியாளர் : 5 பணியிடங்கள் (தமிழ்நாடு சட்டப்பேரவை, தலைமை செயலகப் பணி)கணக்கு அலுவலர் (நிலை மிமிமி) : காலி பணியிடங்கள் 1 கணக்கு அலுவலர் 3 பணியிடங்கள், உதவி மேலாளர் (கணக்கு) : 20 காலி பணியிடங்கள்.
துணை மேலாளர் (கணக்கு) : 1 காலியிடம், உதவி மேலாளர் நிதி : 1 காலியிடம், உதவி பொதுமேலாளர் : 1 காலியிடம்
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) : 6 பணியிடங்கள்
உதவி இயக்குநர் (புள்ளியியல்) 17 பணியிடங்கள்
உதவி இயக்குநர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை) : 3 பணியிடங்கள்
முதுநிலை உதவி இயக்குநர் (கொதிகலன்கள்): 4 பணியிடங்கள்
நிதியாளர் : 6 பணியிடங்கள்
உதவி இயக்குநர் (நகர் மற்றும ஊரமைப்பு ): 4 பணியிடங்கள்
உதவி மேலாளர் (திட்டம்) : 2 பணியிடங்கள்
ஒட்டுமொத்தமாக 118 பணியிடங்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ளது.