திருச்சி, செப். 7- திருச்சி, கருமண்டபத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில், சிலம்ப உலக சம்மேளனம் அமைப்பு நடத்திய தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் 03/09/2023 அன்று நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 79 மாணவ, மாணவிகள் பங்கேற்று, தனிச் சிலம்பம், மான்கொம்பு, வேல்கம்பு, வாள்வீச்சு,சிலம்பச் சண்டை உள் ளிட்ட பல்வேறு சிலம்பப் போட் டிகளில் கலந்து கொண்டு 14 முதல் பரிசுகளும், 23 இரண்டாம் பரிசுகளும், 42 மூன்றாம் பரிசுகளும் பெற்று போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியரும் வெற்றி பெற்று வியத்தகு சாதனை புரிந்ததோடு, தேசிய அளவிலான இப்போட்டியில் ஒட்டுமொத்த வாகையராக வெற்றி வாகை சூடி, சுழற்கோப்பையையும் தக்க வைத்து மாபெரும் சாதனை படைத்துள்ளனர்
வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை தேடித் தந்த மாணவர் களையும், பள்ளியின் சிலம்பப் பயிற்சியாளர் பத்மா அவர்களை யும், பொறுப்பாசிரியர்கள் அருண், நந்தினி, பாண்டிச்செல்வி ஆகியோ ரையும் பள்ளியின் முதல்வர் டாக் டர். க.வனிதா அவர்களும், இரு பால் ஆசிரியர்கள் மற்றும் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.