கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் பங்கேற்று வாழ்த்துரை
ஆயக்காரன்புலம், மே 16- நாகை மாவட்டம்,வேதாரண்யம் ஒன்றி யம் ஆயக்காரன்புலம், காசி வீரம் மாள் திருமண அரங்கில் மே 13 அன்று மாலை 6 மணி அளவில் கழகக் காப்பாளர் கே.முருகையன் – மல்லிகா ஆகியோரின் மகள் மு. ருமேனியாவிற்கும், ஆயக்காரன் புலம் தர்மதுரை- இந்திரா ஆகி யோரது மகன் த. குறளமுதனுக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழா – வேதாரண்யம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்விணையர் மா.மீ. முத்துலட்சுமி அம்மையார் தலை மையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர் திமுக நகர செயலாளர் மா.மீ.புகழேந்தி, திமுக வேதாரண்யம் வடக்கு ஒன்றிய செயலாளர் உதயம் வே.முருகை யன், திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வேதரத்தினம், வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.எஸ் தென் னரசு, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் புயல்குமார், ஆகி யோர் முன்னிலையேற்றனர். விழா வில் கழக காப்பாளர் கி.முருகையன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங் கினார்.
திராவிடர் கழக தோழர்கள் எந்தக் கொள்கையை மேடையில் பேசுகிறார்களோ, அந்தக் கொள் கையை தனது இல்லத்தில் நடை பெறும் நிகழ்வுகளில் செயல்படுத்தி காட்டக் கூடியவர்கள். அந்த வகையில் தந்தை பெரியார் அறி முகப்படுத்திய, அறிஞர் அண்ணா அவர்களால் சட்ட வடிவம் பெற்ற சுயமரியாதைத் திருமணம், அது வும் புரட்சித் திருமணமாக நடை பெறுகிறது. மறைந்த மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்விணை யர் முத்துலட்சுமி அம்மையார் தலைமையில் மணவிழா நடை பெறுவது தந்தை பெரியாரின் அமைதிப் புரட்சிக்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும் என எடுத் துரைத்து உரையாற்றினார்
விழாவில் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.எ.நெப்போலி யன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், நாகை மாவட்ட செய லாளர் ஜெ.புபேஸ்குப்தா, திரு வாரூர் மாவட்ட துணைத் தலை வர் அருண்காந்தி, மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, கழகப் பேச்சாளர் இராம.அன்பழ கன், மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரங்.ஈவெரா, கீழையூர் ஒன்றிய தலைவர் ரெங்கநாதன், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராஜ், திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், திருத்துறைப் பூண்டி நகரத் தலைவர் சித்தார்த் தன், மாவட்ட மகளிரணி பொறுப் பாளர் கலைவாணி, திருத்துறைப் பூண்டி நகர செயலாளர் நாக ராஜன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஒக்கூர் ராஜேந்திரன், இளைஞரணி பொறுப்பாளர் தங்க கிருஷ்ணா, கோ. செந்தமிழ்ச் செல்வி, திருவாரூர் நகரத் தலைவர் ஆறுமுகம், இரா.சிவக்குமார், வேதாரணியம் ஒன்றிய கழக துணைத் தலைவர் ஆறுமுகம், வேதாரணியம் ஒன்றிய கழக துணைச் செயலாளர் பஞ்சாபி கேசன், முத்துசாமி உள்ளிட்ட உற வினர்கள் நண்பர்கள் அனைத்து அரசியல் இயக்க பொறுப்பாளர்கள் பெருந்திரளாக பங்கேற்று மண மக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.