குடியாத்தம், மே 16- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர்கழக அமைப்பா ளர், பேராசிரியர் வே.வினாயக மூர்த்தி திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், ”அமைப்பின் செயல்திற னில் ஆளுமையின் பங்கு” என்கிற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றதை பாராட்டி
12-.5-.2024 அன்று மாலை 7 மணி யளவில் குடியேற்றம் பெரியார் அரங்கில், வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகம், பெருமையோடும் மகிழ்ச்சியோடும் பாராட்டு விழா நடத்தியது.
இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமை தாங்கினார், வேலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளாளர் இ.தமிழ்தரணி வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் க.சையத் அலீம் நிகழ்சியை ஒருங்கிணைத்தார், வேலூர் மாவட்ட தலைவர் வி.இ. சிவக்குமார், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் மா. அழகிரிதாசன், மாவட்ட காப்பா ளர் ச.ஈஸ்வரி, குடியாத்தம் நகர அமைப்பாளர் வி.மோகன், நகர கழகம் க.பரமசிவம், அணைக்கட்டு ஒன்றிய அமைப்பாளர் பொ.இரவீந்திரன், மாவட்ட இளை ஞரணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் க.சீனிவாசன், பகுத்தறி வாளர் கழகம் ப.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமை உரை யாற்றினார்
இந்நிகழ்வில் மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் இர. அன்பரசன் தொடக்க உரையாற் றினார். வேலூர் மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன் வாழ்த்தி பேசினார். திராவிட கழ கத்திற்கு பெருமை தரக்கூடியதாகும் என்று பேசினார்.
கழக சொற்பொழிவாளர் ந.தேன்மொழி தன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்ட திரா விட நட்புக் கழகத்தின் தலைவர் ஆ.சிங்கராயர் சிறப்புரையாற்றி னார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் கலைஞர் ஆராய்ச்சி மருத்துவ மனை இயக்குநர்,மருத்துவர் தி.ச. முகமது சயி கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார்.
இறுதியாக ஏற்புரை ஆற்றிய வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முனைவர்
வே. வினாயகமூர்த்தி பேசியதாவது. சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எனக்கு கல்லூரி பயிலவும் அதிலும் குறிப்பாக முனைவர் பட்டம் பெரும் வாய்ப்பு கிடைத் ததற்கு காரணம் தந்தை பெரியாரே ஆவார் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முனைவர் பட் டம் பெற்ற பேராசிரியரின் சகோ தரர்கள் வே.மொகிலீஸ்வரன்-ஜெ.தீபா, வே.மகாங்கம்-எம்.சுமதி, சகோதரிகள் வே.மகாலட்சுமி, வே.கிருஷ்ணவேணி, இணையர் வி.அம்மு மற்றும் பிள்ளைகள் வே.வி.யோகசரண், வே.வி.மகிழினி, குடும்ப உறுப்பினர்கள், உறவினர் கள், திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழகம், மகளிரணி, திரா விடர் கழக இளைஞரணி மற்றும் பல்வேறு அமைப்பைச் சார்ந்த தோழர்கள் என நூறுக்கும் மேற் பட்டோர் விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக நகர திராவிடர் கழக தலைவர் சி.சாந்தகுமார் நன்றியுரை ஆற்றினார்.