கன்னியாகுமரி மாவட்ட காப்பாளர் ஞா.பிரான்சிசின் மரண சாசனம்

2 Min Read

கன்னியாகுமரி, மே 16- தனது உடலுக்கு எந்த மதச் சடங்குகளும் செய்யக் கூடாது, கழகக் கொடி போர்த்தி மருத்துவக் கல்லூரிக்கு உடலை வழங்க வேண்டுமென கன்னியா குமரி மாவட்ட திராவிடர்கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ் (வயது 83) அனைவருடைய முன்னிலை யில் மரண சாசனம் வெளியிட் டார்.
குமரி மாவட்ட கழகக் காப்பா ளர் ஞா.பிரான்சிஸ் (வயது 83) திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் பல ஆண்டுகளாக திராவிடர்கழகத்தில் இருந்து தொண்டாற்றி வருகின் றார். தனது மரணத்திற்கு பிறகு தனது உடலுக்கு எந்த விதமான மதச் சடங்குகளும் செய்யக்கூடாது, தனது உடலுக்கு கறுப்புச்சட்டை அணிவித்து, திராவிடர் கழகக் கொடி போர்த்தி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அரசு மருத்து வக் கல்லூரியில் ஒப்படைக்க வேண்டும், விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டால் எனது உடல் உறுப்பு களை கொடையாக தருவதற்கும் இதன் மூலம் ஒப்புதல் வழங்குகி றேன் மேற்கண்ட எனது மரண உயிலை நிறைவேற்ற குமரிமாவட்ட திராவிடர் கழக மாவட்டத் தலை வருக்கும், மாவட்டச் செயலாள ருக்கும் அனுமதி அளிக்கிறேன் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய மரணசாசனத்தை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன், திரா விடர் கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலையில் வெளியிட்டார்.

பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், தோவாளை ஒன்றிய கழகத் தலை வர் மா.ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ. சிவ தாணு, மாவட்ட துணைச் செயலா ளர் அய்சக் நியூட்டன் கலை இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; திமுக பேச்சாளர் கோ.சி. சுந்தர் நாகர்கோவில் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, மாநகர செயலாளர் மு. இராஜ சேகர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் ப.வேலாயுத பெரு மாள், பொன்.பாண்டியன், சி.காப் பித்துரை, தும்பவிளை மு.பால் மணி, கோட்டாறு பகுதி கழகத் தலைவர் ச.ச. மணிமேகலை ஆகி யோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மரணசாசன அறிக்கையினை கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம் தயாரித்தார். மரண சாசனம் வெளிட்ட பெரியார் பெருந்தொண்டரை பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *