வல்லம்,. செப். 7-. பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தேர்வு செய்யப் பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடை பெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையுரையாற்றும் போது, இவ்விழா மேனாள் இந்திய குடிய ரசு தலைவர் டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவாக-ஆசிரியர் நாளாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர்களாகிய உங்களை உங் களது மாணவர்களைக்கொண்டு சிறந்த ஆசிரியர் உனது பள்ளியில் யார் என்பதை அவர்களின் மூலம் பெற்று, இன்று உங்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு நம் நாடு. மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் “இந்தி யாவை சிறந்த வல்லரசு நாடாக உருவாக்குவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது” என்று கூறி யதை எடுத்துக் கூறினார். இன்று விருது பெரும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா அவர்கள் உரையாற்றும் போது, முதலாமாண்டு பயிலும் மாணவர்களிடம் உனக்குப் பிடித்த ஆசிரியர்-வாழ்க்கை மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர் யார் என்று தங்கள் பள்ளியில் பயின்ற மாண வர்களிடம் கேட்டு அறிந்தோம். இன்று விருது பெரும் ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள். பாடத்தை மட்டும் கற்றுக்கொடுக்காமல் வாழ்க் கைப் பாடத்தை கற்றுக் கொடுத்து அவர்களின் உயர்வுக்கு துணை நிற்கவேண்டும். மேலும் மாணவர் களுக்கு பாடத்தில் சந்தேகம் இருந் தால் எங்களுடைய போர்டலில் தெரியப்படுத்தினால் அவர்களுடைய சந்தேகங்களுக்கு நாங்கள் விடையளிப்போம் என்று கூறினார்.
தஞ்சை மாவட்ட கல்வி அலு வலர் அமலா தங்காத்தாள் கல்வி அலுவலர் வாழ்த்துரையாற்றும் போது, ஆசிரியர்களை பெருமைப் படுத்தும் விதமாக இந்த விருது “தங்களுக்கு கிடைத்த சிறந்த பெருமையாகும். மாணவர்கள் மனதில் இடம் பிடித்து அவர்களை ஊக்குவித்துள்ளீர்கள். உங்களது பணியை செவ்வனே செய்து இன்று விருது வாங்க வந்துள்ள ஆசிரியர் பெருமக்களை பாராட்டுகிறேன்” என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் த.அறவாழி அவர் கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் தமது உரையில், “ஆசிரியர்கள் திறமையானவர்கள் என்பதை ஆய்வு செய்தும், சுற்றுப் புறங்களில் உள்ளவர்கள் இந்த ஆசிரியர் திறமையானவர் என்று கூறுவதை விட, என்னுடைய மாண வன் என்னை சிறப்பான ஆசிரியர் என்று கூறுவதில் தான் சிறப்புள்ளது. நீங்கள் மாணவர்களுடைய மனதில் முத்திரை பதித்துள்ளீர்கள். இப்பல்கலைக்கழகம் பல உயர் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் சிறந்து விளங்குகிறது. உங்கள் மாணவர்கள் திறமையான இடத்திற்கு கல்வி கற்க வந்துள்ளார் கள். அவர்களை திறம்பட பயன்படுத் திக் கொள்ளவேண்டும்” என்றார்.
கல்விப்புல முதன்மையர் முனைவர் ஜெ.ஜெயசித்ரா மற்றும் சேர்க்கை இயக்குநர் முனைவர் எம்.சர்மிளாபேகம், துணை இயக் குநர் முனைவர் தி.கிருஷ்ணகுமார் மற்றும் முதன்மையர்கள், இயக்கு நர்கள் மற்றும் துறைத்தலைவர்கள், மாணவர்கள் விருது பெறும் ஆசி யர்களின் குடும்ப உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழா வைச் சிறப்பித்தனர்.