மயிலாடுதுறை, மே16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 15.5.2024 அன்று மாலை 6 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடை பெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை குருசாமி, மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கி.தளபதி ராஜ் அனைவரையும் வரவேற்று கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை எடுத்துரைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில கழக ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் இயக்க செயல்பாடுகளையும் தமிழர் தலைவரின் ஓய்வறியா தொண்டையும் குறிப்பிட்டு ஆற்ற வேண்டிய பணிகளை விரிவாக எடுத் துரைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன், குத்தாலம் ஒன்றிய தலைவர் சா.முருகையன், மயிலாடுதுறை ஒன்றியத் தலைவர் ஆர்.டி.வி.இளங் கோவன், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, நகர செய லாளர் பூ.சி.காமராஜ், சீர்காழி ஒன்றிய தலைவர் ச.சந்திரசேகரன், செயலாளர் சா.ப.செல்வம், கொள் ளிடம் ஒன்றிய செயலாளர்
பூ.பாண்டுரங்கன், கொக்கூர் தட்சி ணாமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் க.அருள்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் தோழர் எம்.செல்வராஜ், சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் க.சபாபதி ஆகியோர் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது எனவும், 24.3.2024 அன்று தஞ்சையில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்பு நாளேடான விடுதலைக்கு மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் 100 விடுதலை சந்தாக்களை சேர்ப்பது எனவும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு நூற்றாண்டு விழாக்களை மயிலாடுதுறை மாவட் டம் முழுவதும் சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 
			 
		 
		 
		 
		 
		 
		 
		 
		