சென்னை, மே 16 திமுக இளைஞர் அணியினரின் செயல்பாடுகள் குறித்து, அடுத்த கட்ட ஆய்வுக் கூட்டம் சென்னை அன்பகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் (16-_17.5.2024) நடைபெறுகிறது.
மக்களவை பொதுத் தேர்தல் முடிந்த நிலை யில், கட்சிப் பணிகளில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச் சருமான உதயநிதி கவ னம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாகவே, இந்த ஆய்வுக் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்ன தாக, இளைஞரணியின் புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல வாரியாக அறிந்து கொள்ளும் நோக்கில், சென்னை, அந்தமான் உட்பட முதல் மண்டலம், காஞ்சிபுரம், விழுப்புரம், கள் ளக்குறிச்சி மாவட்டங்கள் அடங்கிய 2ஆ-வது மண் டலத்துக்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்த கட்டமாக 3ஆ-வது மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட நிர் வாகிகளின் செயல் பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றும், நாளையும் சென்னை அன்பகத்தில் நடைபெறு கிறது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக் கூட் டத்தில், இன்று மாலை 4 மணிக்கு திருவண்ணா மலை தெற்கு, திருவண் ணாமலை வடக்கு, புதுச் சேரி மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள் நாளை மாலை பங்கேற் கின்றனர்.
இக்கூட்டத்தில், நிர் வாகிகள் செயல்பாடு களை ஆய்வு செய்யும் உதயநிதி ஸ்டாலின், சரியாக பணியாற்றாத நிர்வாகிகளை கட்சிப் பணியில் இருந்து அகற் றவும் திட்டமிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று வெளியாகும் முடிவுகள் அடிப்படையில், சரியாக செயல்படாத நிர்வாகி கள், மாவட்டச் செய லாளர்கள் உள்ளிட் டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதே கருத்து இளைஞரணி யிலும் எதிரொலித்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதா கவே, அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர் தலைக் கருத்தில் கொண்டு இளைஞரணியில் நிர் வாகிகள் மாற்றப்பட லாம் என்று திமுக வட் டாரங்கள் தெரிவித்தன.