சென்னை, மே.16- ஒரு நாள் பயிற்சிக்காக (Internship) அய்ந்து கல்லூரிகளைச் சேர்ந்த இருபால் மாணவர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களைச் சந்தித்து உரையாடினர்.
சென்னையைச் சேர்ந்த ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் மகளிர் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, டி.ஜி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி, ஜே.பி.ஏ.எஸ். கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய அய்ந்து கல்வி நிலையங்களிலிருந்து தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் பயிலும் 1 பார்வை மாற்றுத் திற னாளி மாணவர், 1 உதவி மாணவர் மற்றும் 56 மாணவிகளோடு மொத் தம் 58 பேர் வருகை தந்திருந்தனர்.
இந்நிகழ்வு 13.05.2024 அன்று காலை 10.30 மணிக்கு பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் பெரியார் திடல் மேலாளர் சீதாராமன், தோழர் மனோகரன் ஆகியோர் ஒருங் கிணைப்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
‘விடுதலை” நாளிதழ் உருவாகும் விதம் பற்றி நேரில் அறிந்து கொள் ளும் பணியிடைப் பயிற்சிக்காக (INTERNSHIP) வந்திருந்தவர்க ளுக்கு, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளை நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் சரவணன் ஆகியோர் கற்றுக் கொடுத்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு பெரியார் ஆய்வு நூலகம், ‘விடுதலை’ செய்திப்பிரிவு, விடு தலை அச்சகம், பெரியார் காட்சிய கம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகளையும், பெரியார் நினை விடத்தையும் நேரில் பார்வையிட்டனர். நூலகத்தில் நூலகர் கோவிந்தன், செய்திப்பிரிவில் தோழர்கள் வே.சிறீதர், சிங்காரம், பாண்டுரங்கன் மற்றும் விடுதலை அச்சகத்தில் மேலாளர் சரவணன், பெரியார் காட்சியகத்தில் பிரின்சு ஆகியோர் மாணவர்களுக்கு அந் தந்த பிரிவுகளைப் பற்றிய பாடத் தைக் கற்றுக் கொடுத்தனர்.
மறுபடியும் நடிகவேள்
எம்.ஆர்.ராதா மன்றத்திற்கு திரும் பிய மாணவர்கள் மத்தியில், துணைத் தலைவர் கவிஞர்
கலி. பூங்குன்றன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், விடு தலையும், சுயமரியாதை இயக்கமும் செய்த சாதனைகளைக் குறிப்பிட் டார்.
நெருக்கடி காலத்தில் விடுதலை எப்படிப்பட்ட தணிக்கைக்கு ஆளானது; அதிலிருந்து எப்படி மீண்டது; 90 வயதைக் கடந்தும் எப்படி பீடு நடை போடுகிறது என்பது பற்றியும் விவரித்து தனது உரையை நிறைவு செய்தார்.
தொடர்ந்து, இயக்க வெளி யீடுகள், பெண் ஏன் அடிமை யானாள்? புத்தகம் ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கி வாழ்த் தினார். காலையில் 10:30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2:30 மணிக்கு பயிற்சி முடிந்து மாணவர்கள் விடைபெற்றனர். ஒருங்கிணைப்புப் பணிகளில் உடுமலை வடிவேல், யுகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.INTERNSHIP