பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு – திராவிட மாடல் ஆட்சியின் 4ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நெ.தமிழ்மதிக்கு பாராட்டு விழா மற்றும் அன்னையர் நாள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 07-00 மணிக்கு சென்னை கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் முன்னிலையில் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.விழாவில் அம்பத்தூர் தெற்கு பகுதி தி.மு.க.பொருளாளர் கு.சங்கர், தேவேந்திர குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர் நிகழ்வில் ஆறுமுகம், கருப்பசாமி, சிறீதரன், சரவணன், பிச்சை மணி, அரிதாஸ், உதயசூரியா, கெஜலட்சுமி, ஜெயந்தி, ஜெயலட்சுமி, சுமதி மணி, சசிகுமார், கார்த்திக், செந்தமிழ்ப்பரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர் கழகம்
நெ.தமிழ்மதி நன்றி கூறினார்.
பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 420ஆவது வார நிகழ்வு
Leave a Comment