பாரதம், தமிழகம், பாரத மாதா, ஜெய்ஹிந்த் என்று சென்னை அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசி இருக்கிறார்.
இப்படி அவர் பேசுவது தான் நல்லது. இவர்களை எளிதாக தமிழ்நாட்டு மக்கள் அடை யாளம் காண்பார்கள். காரணம் தந்தை பெரியார் இந்த மண் ணில் திராவிட இனவுணர்வு என்னும் உணர்வை கனன்று ஊன்றியிருக்கிறார். எளிதில் மக்கள் உள்ளங்களில் பற்றிக் கொள்ளும்.
பேசுபவர்களின் சட்டை யைக் கழற்றிப் பார்த்தால் பூணூல் ஊஞ்சலாடும் அப்பொ ழுது இம் மண்ணின் மைந்தர்கள் தெளி வாகப் புரிந்து கொள்வார்கள், பேசுவது பூணூல் தான் என்பதை!