திருவனந்தபுரம், மே 16 திருவண்ணா மலையை சேர்ந்த 15 பக்தர்கள் ஒரு மினி பேருந்தில் சபரிமலைக்கு சென்றனர். இவர்கள் வழிபாடு முடித்துவிட்டு நேற்று (15.5.2024) மதியம் ஊருக்கு புறப்பட்டனர். பத்தனம்திட்டா அருகே துலாப்பள்ளி பகுதியில் ஒரு இறக்கமான பாதையில் பேருந்து சென்று கொண்டி ருந்தபோது எதிர் பாராதவிதமாக கட்டுப் பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்துக்குள் இருந்தவர்கள் அனை வரும் காயமடைந்தனர்.
காவல்துறையினர் காயமடைந்த வர்களை மீட்டு எருமேலி மற்றும் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனு மதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பிரவீன் (4) என்ற சிறுவன் உயிரிழந்தான். ஆபத்தான நிலையில் உள்ள 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.