புதுடில்லி, செப். 7 – ஒரே நாடு, ஒரே தேர் தல் நடைமுறைக்கு சாத்தியமில் லாதது என நாடாளுமன்ற கழகக் குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ‘ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம்’ என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும், இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்களையே பா.ஜ.க. புகுத்த முயற்சிக்கிறது என்றும், பா.ஜ.க.வின் ஆட்சி முறையே விந்தையாக உள்ளதாகக் கூறினார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட முயற்சி குறித்து ‘இந்தியா’ கூட்டணி கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் டி.ஆர்.பாலு கூறினார். இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப் பட்டுள்ளதால் பாரதம் என்ற பெயரை பயன்படுத்த பா.ஜ.க. முயற்சிப்ப தாகவும் டி.ஆர்.பாலு விமர்சித்தார்.
370ஆவது சட்டத் திருத்தம்
தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, செப்.7 ஜம்மு-காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவை ஒன்றிய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப் பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
ஜம்மு-_காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி அளித்து வந்த அரசமைப்பு சட்டத் தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலம் நிலுவை யில் இருந்த இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கி 16 நாட்கள் நடத்தியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் உள்ளிட்ட அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இதனை விசாரித்தது. ஒன்றிய அரசு மற்றும் மனுதாரர்கள் என இரு தரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்ததை யடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் (5.9.2023) அறிவித்தது.
இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சி யின் தலைவரும், மனுதாரர்களில் ஒருவரு மான ஹஸ்னைன்மசூதி கூறுகையில், “உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட வாதங்கள் முழு திருப்தியளிக் கின்றன. அனைத்து அம்சங்களும் நம்பிக்கைக்குரிய வகையில் வாதிடப் பட்டன” என்றார்.