கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
7.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா, ஆந்திரா சட்டமன்றங்களுக்கும் சேர்த்து முன்கூட்டியே 2024 ஜனவரியில் பொதுத் தேர்தல். பாஜக ஆலோசனை.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* ஜாதிப் பாகுபாடு காரணமாக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப் பட்டார்.
* தலையை துண்டிக்க தூண்டிய அயோத்தி சாமியார் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார். வழக்குப் பதிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கட்சி தவறான பாதையில் செல்வதாக குற்றஞ்சாட்டி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ் பாஜகவில் இருந்து விலகினார்.
தி டெலிகிராப்:
* நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட ஒன்பது பிரச்சினை களை விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு அக்டோபரில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
– குடந்தை கருணா