தத்துப்பிள்ளை
செய்தி: கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். – பிரதமர் மோடி பேச்சு
சிந்தனை: கங்கை என்றாலே பல்வேறு தொழிற் சாலைகளின் கழிவுப்பொருள்களின் சங்கமம், நோய்களின் இருப்பிடம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
எந்த இராமாயணம்?
செய்தி: ரூபாய் 835 கோடியில் இராமாயணம் திரைப்படமாக ஹிந்தியில் உருவாகிறது.
சிந்தனை: எந்த இராமாயணம்? இராவணன் மகள் சீதை என்று வங்காள இராமாயணம் கூறுகிறதே! இராமாயணம் ஒன்றா, இரண்டா? எந்த இராமாய ணத்தை திரைப்படமாக எடுக்கப் போகிறார்கள்?
கங்கை சுத்தமாகவில்லையே!
செய்தி: கங்கை எனது தாய் பிரதமர்!
– மோடி பேச்சு
சிந்தனை: பல்லாயிரம் கோடி ரூபாய் ஒன்றிய அரசு செலவு செய்தும் கங்கை சுத்தமாகவில்லையே!