ரூபாய் 434 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்கள், சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, செப். 8  –  நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.434.65 கோடி செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று (7.9.2023) திறந்து வைத்தார்.

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற் கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப் பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

* சென்னை -கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் ரூ.280 கோடியே 73 லட்சம் செலவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் – நாமக்கல் – சேந்தமங்கலம் – ராசிபுரம் சாலை யில் (மா.நெ – 95) 31.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடின புருவங் களுடன் கூடிய இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது.

* சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.58 கோடியே 64 லட்சம் செலவில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் -_ பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலம் மற்றும் சாலையை இரண்டு வழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத் தப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் – பொன்னேரி – பஞ்செட்டி சாலையில் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருந்த 5.50 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய பாலம், தற்போது அகலப்படுத் தப்பட்டு மறுகட்டுமானம் செய்யப் பட்டுள்ளது.

இப்பகுதியைச் சுற்றிலும் சி.பி.சி.எல்., அய்.ஓ.சி.எல், எம்.எப்.எல். போன்ற தொழிற்சாலைகள் இயக்குவதால் இச்சாலையில் கனரக வாகனங்கள் பெருமளவில் இயக்கப்படுகின்றன.

இப்புதிய பாலத்தால் இப்பகுதி யில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். திருவொற்றியூரிலிருந்து மணலி, மாதவரம், மீஞ்சூர் மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங் கள் எளிதாக செல்ல முடியும். மணலியிலிருந்து தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் மற்றும் சென்னை செல்லும் வாகனங்களும் எளிதாக செல்ல முடியும்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் ரூ.434.65 கோடியில் அமைக்கப்பட்ட பல்வேறு சாலை களை பொதுமக்களின் பயன்பாட் டிற்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சாலை மேம் பாட்டுத் திட்ட இயக்குநர் பிர பாகர், நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சந்திர சேகர், தேசிய நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளர் கீதா, தொழிற்தட திட்ட தலைமை பொறியாளர் செல்வன்மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *