20.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* பிரதமர் மோடி இரண்டு ‘ஹிந்துஸ்தான்களை’ உருவாக்க விரும்புகிறார். ஒன்று அதானிக்கும் மற்றொன்று ஏழைகளுக்கும் என ராகுல் குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* ஆளுநர் ரவி திடீர் டில்லி பயணம்; மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (20.11.2023) விசாரணை.
* ஆளுநர் ரவியின் அரசமைப்பு சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை – தலையங்கத்தில் பாராட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* அகமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள நேரம் கிடைத்த மோடி – வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரை இன்னும் பார்வையிடவில்லை என காங்கிரஸ் விமர்சனம்.
தி டெலிகிராப்
* அதானி-ஹிண்டன்பர்க் தகராறு: செபிக்கு காலக்கெடு வழங்கப்பட்ட போதிலும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு இணங்கத் தவறிவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவுப்படி இறுதி முடிவு/அறிக்கையை சமர்ப்பிக்க வில்லை என்றும் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல்.
எகனாமிக் டைம்ஸ்
* இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடை ரத்து செய்வோம் என்ற பாஜக தேர்தல் அறிக்கைக்கு பதிலாக இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு உள்ளது, நீங்கள் கொடுக்க வேண்டும், என முகமது அசாருதீன் கடும் எதிர்ப்பு.
டெய்லி பயனியர்
* இந்திய ரயில்வேயை அரசாங்கத்தின் சேவை வழங்கும் கிளையாக மாற்றாமல் பணம் கொள்ளையடிக்கும் பணியாக மாற்றியுள்ளதாக மோடி அரசு மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தாக்கு.
– குடந்தை கருணா