அஞ்சல் நிலைய வங்கியில் (அய்.பி.பி.பி.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எக்சிகியூட்டிவ் (அய்.டி., ) பிரிவில் அசோசியேட் கன்சல்டன்ட் 28, கன்சல்டன்ட் 21, சீனியர் கன்சல்டன்ட் 5 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., (கம்ப்யூட்டர் / அய்.டி.,) அல்லது எம்.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., (கம்ப்யூட்டர்)/பி.சி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.4.2024 அடிப்படையில் அசோசியேட் கன்சல்டன்ட் 22 – 30, கன்சல்டன்ட் 22 – 40, சீனியர் கன்சல்டன்ட் 22 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு. தேவைப்பட்டால் இணைய வழி தேர்வு / குழு விவாதம் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150
கடைசி நாள்: 24.5.2024
விவரங்களுக்கு: ippbonline.com