சென்னை,மே15– கடந்த 2 நாட்களில் தொடக் கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3,033, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 என 5,869 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதேபோல், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் இடை நிலை ஆசிரியர் மாறுதலுக்கு 168, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 4,375, முதுகலை பட்ட தாரி ஆசிரியர் மாறுதலுக்கு 2,748, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 178, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 146 என 7,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. ஆக, தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 13,484 விண்ணப்பங்கள் ‘எமிஸ்’தளத்தில் பதிவிடப் பட்டுள்ளன. ஆசிரியர்கள் போட்டிப் போட்டு விண்ணப் பிப்பதால், எமிஸ் தளம் நேற்று (14.5.2024) முடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.