சென்னை,மே15-சென்னை மாநகரப் பகுதி 426 சதுர கிமீ பரப்பில் விரிவடைந்துள்ளது. சுமார் 85 லட்சம் மக்கள் வசிக் கின்றனர். தினமும் சுமார் 15 லட்சம்பேர் வந்து செல்கின்றனர். மக்கள் தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாள் தோறும் 1072 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோ கிக்கப்படுகிறது.
பொதுமக்களின் சொந்த ஆதாரங்கள், கேன் குடிநீர்மூலம் அன்றாடம் 200 மில்லியன் லிட்டருக்கு மேல் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் நீர், சுமார் 1000 மில்லியன் லிட்டருக்கு மேல் கழிவுநீராக நாள்தோறும் வெளியேற்றப்படுகிறது.
சென்னை குடிநீர் வாரியத் திடம் கழிவுநீரை வெளியேற்ற, வீடுகள் மற்றும் தொழில் நிறு வனங்களுக்கு 9 லட்சத்து 30 ஆயிரம் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.
அவற்றின் வழியாக வரும் கழிவுநீரை 302 கழிவுநீரேற்றும் நிலையங்கள் மூலமாக 13 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவற்றில் நாள்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த கழிவுநீர் சேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் 4 ஆயிரம்கிமீ-க்கு நீளத்துக்கு மேல் கழிவுநீர்குழாய் கட்டமைப்புகளை கொண் டுள்ளது. இந்த கழிவுநீர் குழாய்களுக்கு நடுவே இயந்திர நுழைவுவாயில்கள் அமைக்கப்படுகின்றன.
மக்கள் தங்கள் கழிவறைகளில் அஜாக்கிரதையாக வீசும் நெகி ழிப் பைகள், பாட்டில்கள் மற் றும் இதர பொருட்கள், இந்த இயந்திர நுழைவு வாயில்களில் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்து கின்றன. மேலும் இந்த குழாய் களில் எலிகள் வலைகளை ஏற்படுத்தி மண்ணையும் தள்ளி விடுகின்றன. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்வது தடைபடு கிறது.
இத்தகைய அடைப்புகளை நீக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆட்கள் இறக்கப்பட்டனர். நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தற்போது இயந்திர ஆட் டோக்கள் மூலமாக அடைப் புகள் நீக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளின்போது சில ஆண்டுகளுக்கு முன்பு, மாதவரம் பகுதியில் இரு பணியாளர்கள் விஷ வாயு தாக்கி இயந்திர நுழைவு குழியில் விழுந்து உயிரி ழந்தனர்.
இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம், பெருநிறுவன சமூக பொறுப்புநிதியில் 3 நவீன அடைப்பு நீக்கும்‘பண்டிகூட் (ஙிணீஸீபீவீநீஷீஷீt)’ இயந்திரங்களை சென்னை குடிநீர் வாரியத்துக்கு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
இந்த இயந்திரம் ‘ரோபோடிக்’ தொழில் நுட்பத்தில் உருவாக் கப்பட்டுள்ளது. சோதனை முறையில் திரு.வி.க.நகர், தேனாம் பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை கொண்டு, இயந்திர நுழைவு வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணி களை எளிதாக செய்ய முடியும். அதில் சென்சார் கேமராக்கள், விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் அடைப்பு நீக்கும் பணி எளிதாகும்.
விஷ வாயு தாக்கி பணியா ளர்கள் மரணிப்பதை தடுக்க முடியும். மனித உழைப்பும் குறையும்.
எரிபொருளும் மிச்சமாகும். இயந்திர நுழைவு வாயில்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை பார்க்க பெரிய திரையும் இடம் பெற்றுள்ளது.
அதில் பார்த்து எளிதில் அடைப்புகளை நீக்க முடியும். இதன் பயன்பாடு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் பிற மண்டலங்களில் விரிவாக்குவது குறித்து வாரிய தலைமை முடி வெடுக்கும்.
-இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.