செங்கல்பட்டு, மே 15- 12.5.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலை யம் காமராசர் சிலை அருகில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடி அரசு ஏடு நூற்றாண்டு தொடக்க விழா தெரு முனை கூட்டம் கூடுவாஞ் சேரி ம. இராசு பெரியார் கொள்கை புத்தகங்களை பரப்பினார்.
மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் தலைமை உரை ஆற்றினார். ஒன் றிய தலைவர் ம.நரசிம் மன் வரவேற்புரை ஆற் றினார். மாவட்ட ப.க. தலைவர் அ. சிவகுமார் தொடக்க உரை ஆற் றினார்.
மாவட்ட ப.க. அமைப் பாளர் மு. பிச்சைமுத்து, மாவட்ட பக ஆசிரியரணி சே. சகாயராஜ் மாவட்ட அமைப்பாளர் பொன்.ராஜேந்திரன், காஞ்சி மாவட்ட இணை செய லாளர் ஆ. மோகன் வள் ளுவர் மன்ற செயலாளர் ம.சமத்துவமணி மறை மலைநகர் தலைவர், திருக்குறள் வெங்கடே சன் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் மு.அருண் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கவிஞர் ஆ.கிருஷ்ணன் பெரியாரின் தொண்டு சிறப்பை கவிதை வாசித் தார் மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை தந்தை பெரியார் அவர்கள் நூறாண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏன் சுயமரியாதை இயக் கம் மற்றும் குடிஅரசு ஏடு ஆகியவற்றை தொடங்கி பார்ப்பனரல்லாதார் மக் களுக்கான உரிமைகளுக் காக போராட்டங்கள் நடத்தினார். நாம் பெற்ற உரிமைகளும் பெரியா ரின் கொள்கைகளை சட் டம் ஆக்கிய தமிழ்நாட்டு முதலமைச்சர்களை நினைவு படுத்தி அந்த உரிமைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
அறிவு வழி காணொலி இயக்குநர் தாமோதரன் நிகழ்ச்சியினை ஒளி பரப்பு செய்தார்.
மாவட்ட பக செய லாளர் சி.தீனதயாளன், வடசென்னை பெரியார் நூலக வாசகர் வட்டம் செல்லப்பன், தாம்பரம் நகர செயலாளர் மோகன் ராஜ், இளைஞர் அணி செயலாளர் நரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அனைத்து கட்சித் தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.