புதுடில்லி செப் .8 இந்திய ஒற்றுமை நடைப் பயணத் தின் ஓராண்டு நிறைவை யொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள் ளார். அதில், ‘இந்திய ஒற் றுமை நடைப் பயணத்தின் அன்பை நோக்கிய நடைப் பயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தை பாராட்டி பல்வேறு தலைவர்கள் பதிவிட்டுள்ளனர். 4,000 கி.மீ. பயணத்தை பாராட்டி உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது மக்கள் இயக்கம் என்றும் வரலாற்றில் ஈடு இணையற்றது என்றும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை ஓராண்டு பயண நிறைவு வெறுப்புணர்வு ஒழியும் வரை எங்கள் நடைப் பயணம் தொடரும் : ராகுல் உறுதி
Leave a Comment