இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்
தர மறுத்ததால் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு சென்ற தாய்
மீராட், செப்.8 உத்தரப்பிரதேசத்தில் இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அப்பகுதியில் சாலையில் இறந்து கிடந்து உள்ளார். பல மணி நேரமாக அவரது உடல் அங்கேயே கிடந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ராஜூவின் தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜூ உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இறுதி நிகழ்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். ஆனால் பல மணி நேரமாக கேட்டு பார்த்தும் உடலை எடுத்து செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை.
இதனால் ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த தாய்-மகன் இருவரும் இறுதி நிகழ்வு செய்வதற்கும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். இதையடுத்து அவர்கள் உதவிக்காக அருகே உள்ள காவல் நிலையத்தை நாடினர். அங்கு பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளர் அமித்குமார் மாலிக் நிதி உதவி செய்ததோடு மேலும் சிலரிடமும் நிதி திரட்டி இறந்த ராஜூ உடலுக்கு இறுதி நிகழ்வு செய்ய உதவினார். பின்னர் இறுதி நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்கி டையே வாலிபர் உடலை தள்ளு வண்டியில் ஏற்றி சென்ற காட்சிப் பதிவு வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவக்கல் லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடைபெற்று வரு கிறது. அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் கூறினார்.