காஞ்சிபுரம், மே 14-இளைஞர்களை மேம்படுத்தும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிற்கான நேர் காணலை, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது வரும் மே 14 அன்று நடைபெறும் என அறிவித் திருப்பது விதிமுறை மீறலாக கருதப் படுகிறது.
இதன் வழி பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஆர்.எஸ்.எஸ். நிர்வா கியை இயக்குநர் பொறுப்பில் அமர்த்தவும் திட்டமிடுகிறது பாஜக. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் கூறியுள்ளார்.