ஆவடி, மே 14- 12.5.2024
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.-30 மணிக்கு ஆவடியில் உள்ள பெரியார் மாளிகையில் மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற்புடன் வை.கலை யரசன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலை மையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாள ராக மாநில அமைப்பா ளர் வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கலந்து ரையாடல் கூட்டத்தின் நோக்கமான விடுதலை சந்தா சேர்ப்பது குறித்து வலியுறுத்தி பேசினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் க.இளவரசன் அவர்களின் சகோதரி குண்டலகேசி தாயார் க.காமு அம்மாள் மறை வுக்கு இரங்கல் செலுத் தப்பட்டது.பின் தேர்தல் நேரத்தில் கொரட்டூர் பகுதியில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் பிரச்சார கூட்டம் சிறப் பாக நடைபெற பாடு பட்ட மாநில அமைப்பு சாரா தொழிலாளர் அணி திருவள்ளூர் மாவட்ட தலைவர் கி.ஏழுமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், வை.கலையரசன் ஆகியோரைப் பாராட்டி மாநில அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பயனாடை அணிவித் தார்.
நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மு.ரகு பதி, ஆவடி நகரதலைவர் கோ.முருகன், துணை தலைவர் சி.வச்சிரவேலு, திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணி மாறன், ஒன்றிய செயலா ளர் சு.வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சுந் தர்ராஜன், துரை முத்து கிருட்டிணன், உடுமலை வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.