வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு கருதி செல்வோர் கவனத்திற்கு..

1 Min Read

பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமாக செல்ல வேண்டும்

காஞ்சிபுரம், மே 14- வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமே செல்ல வேண்டும் என்று காஞ்சி ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி பயின்ற இளைஞர்கள் தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ பணி என்றும், அதிக சம்பளம் என்றும் கூறி சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்துச் செல்லப் படுகின்றனர்.
அங்கு அவர்கள் கால் சென்டர் மோசடி, கிரிப்டோ கரன்ஸ்சி மோசடி என்ற பெயரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றன.

எனவே, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலமே செல்ல வேண்டும். இது தொடர்பாக விவரங்கள் தெரியாவிட்டால் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடி பெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூத ரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன் மையை உறுதி செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in அறிந்து கொள் ளலாம்.
மேலும் சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண் 90421 49222 மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும் [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம்.
மேலும், வெளிநாடு வாழ்தமிழர்களுக்கு உதவி தேவைப்பட்டால். அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மய்யத்தின் தொடர்பு எண்கள் 18003093793, 8069009901. 8069009900 (Missed call No.) பயன்படுத்தலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *