நேதாஜியின் பேரனும், மேற்கு வங்க பி.ஜே.பி.யின் நிர்வாகி களுள் ஒருவருமான சந் திரபோஸ், பி.ஜே.பி.க்கு முழுக்குப் போட்டுள் ளார்.
அவர் கூறிய காரணமாவது:
நான் பி.ஜே.பி.யில் சேரும்போது நேதாஜியின் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறினார்கள், பி.ஜே.பி. தரப்பினர். அந்த அடிப்படையில் ‘‘ஆசாத் ஹிந்த் மோர்ச்சா” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் செயல்படவும் முயற்சித்தேன். ஆனால், இதற்கு எனக்கு எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. பா.ஜ.க.வோடு என் கொள்கை ஒத்துப் போகாததால் நான், பா.ஜ.க.விலிருந்து விலகுகிறேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் நேதாஜியின் பேரன்.