பக்தி என்பதே அடிமையைவிட மோசமான வார்த்தை என்று எண்ணுகிறேன். அடிமை என்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்யக் கடமைப்பட்டவனாவான். பக்தி என்பது சரீரத்தினாலும் தொண்டு செய்ய வேண்டிய துடன், மனத்தினாலும் செய்ய வேண்டும். ஆகவே மனத் தைச் சுவாதீனமற்றதாக்கிக் கொள்ள வேண்டும். சுதந்திரத் தையும், சுயமரியாதையையும் எதிர்பார்க்கும் மனிதன் யாருக்கும் பக்தனாயிருக்க முடியுமா? யாரையும் பக்தியாயிருக்கச் சொல்லவும் முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’