மாநிலங்களவையில், தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதா உள்பட 25 மசோதாக்கள் கிட்டப்பில் உள்ளன

2 Min Read

புதுடில்லி, செப்.8 பொதுவாக, நாடா ளுமன்ற மக்களவையில் தாக்கல் செய் யப்படும் மசோதா, அங்கு நிறைவேற்றப் பட்ட பிறகு, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலை தொடர்ந்து, அது சட்டமாக மாறும்.  

 மாநிலங்களவைக்கு பதவிக் காலமே கிடையாது. அது தொடர்ந்து இருக்கும். எனவே, அங்கு ஏதேனும் ஒரு மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தால், அது தொடர்ந்து உயிருடன் இருக்கும். அந்தவகையில், 25 மசோ தாக்கள் மாநிலங்களவையில் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. மாநிலங் களவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அவற் றில், 1992ஆ-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 79-ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதாவும் அடங்கும். 2 குழந்தை களுக்கு மேல் பெற்றவர்கள், கிராம ஊராட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க அம்மசோதா வழி வகுக்கிறது. 

கட்சிகளிடையே கருத் தொற் றுமை ஏற்படாததால், அது நிறைவேற்றப்பட வில்லை. 2012ஆ-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை ரத்து மசோதாவும் குறிப்பிடத்தக்க மற்றொரு மசோதா ஆகும். முந்தைய ஆட்சியில், சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக் கையை ரத்து செய்ய அம்மசோதா வகை செய்கிறது. 

நிலுவையில் உள்ள சில முக்கியமான மசோதாக்களும், அவை கொண்டு வரப் பட்ட ஆண்டு விவரங்களும் வருமாறு:- டில்லி வாடகை திருத்த மசோதா -1997, நகராட்சிகள் எல்லை நீட்டிப்பு மசோதா-2001, விதை மசோதா-2004, இந்திய மருந்துகள் மற்றும் ஓமியோபதி மருந்தக மசோதா-2005, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா-2008, சுரங்கங்கள் திருத்த மசோதா -2011, இடம் பெயர்ந்த தொழி லாளர்கள் பணி ஒழுங்குமுறை திருத்த மசோதா-2011, கட்டுமான தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதா- 2013, வேலைவாய்ப்பு அலு வலக காலியிட அறிவிப்பாணை திருத்த மசோதா-2013, ராஜஸ்தான் சட்ட மேலவை மசோதா-2013, பதிவு திருத்த மசோதா-2013, அசாம் சட்ட மேலவை மசோதா-2013, வக்பு சொத்து களை ஆக்கிரமித்தோரை வெளியேற்றும் மசோதா-2014, வெளிநாட்டுவாழ் இந்தி யர்கள் திருமண பதிவு மசோதா-2019, நதிநீர் பிரச்சினை திருத்த மசோதா-2019. கடந்த மாதம் நடந்த மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் பட்ட தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதி பதியை விடு விப்பதற்கான மசோதாவும் நிலுவையில் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *