சென்னை, மே 13- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த்தப்பட்டுள் ளனர் என அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
உலக செவிலியர் நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள் அமைச்சர் மா.சுப்பிரமணி யனை நேற்று (12.5.2024) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரம ணியன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
செவிலியர்களின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேள் அம்மையா ரின் பிறந்தநாளான மே மாதம் 12ஆம் தேதி ஆண்டுதோறும் பன்னாட்டு செவிலியர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகி றது. 90 சதவீதத்துக்கு மேலான கோரிக் கைகள் முழுமை பெற்றுள்ளது. 1,412 ஒப்பந்தச் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ஒப்பந்த செவிலியர் களாக இருந்தவர்களுக்கு ரூ.16,000 ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. அது ரூ. 18,000 ஆக உயர்த்தப்பட்டது.
அதோடு மட்டுமல்லாது 1,912 எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணி அமர்த் தப்பட்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 9,535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர்கள் விரும்புகிற பணியிடங் களுக்கு சென்றிருக்கிறார்கள்.
செவிலியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கும் தேர்வுக்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.