ஓமலூர், மே 13– ஓமலூர் பேருந்து நிலையம் அருகே 7-.5.-2024 அன்று சுயமரியாதை குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஓமலூர் ஒன்றிய தலைவர் பெ.சவுந்திர ராசன் தலைமை ஏற்க வரவேற்புரை மாவட்ட செயலாளர் பா.கலை வாணன் நிகழ்த்த காப்பாளர் பழநி.புள்ளையண்ணன், காப்பா ளர் சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன், மாவட்ட தலைவர் க.கிருட்டின மூர்த்தி முன்னிலையில் சிறப்பாக நடந்தேறியது.
தலைமை கழக அமைப்பாளர் எடப்பாடி கா நா பாலு தொடக்க உரை நிகழ்த்த கழக பேச்சாளர் புவனகிரி யாழ் திலீபன் சிறப்புரை யாற்றினார் .பொதுமக்கள் ஆங்காங்கே நின்றபடி பேச்சை கேட்டு கொண்டு இருந்தார்கள்.
விழாவில் மேட்டூர் மு நேரு, இரா.கலையரசன்,சி.சீனிவாசன், வெள்ளார் அ.ப இராசேந்திரன், சு கபிலன், பகுத்தறிவாளர்கள் கழகத்தின் சார்பில் சி.மதியழகன், கோவி.அன்புமதி,க.வேல்முருகன், சிந்தாமணியூர் எல்லப்பன், கு.ஏழு மலை அவரது துணைவியார்,சி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றி உரை மேச்சேரி ஒன்றிய தலைவர் அ.ப இராசேந்திரன் நிகழ்த்த விழா இனிதே நடந்தேறியது.