செஞ்சி, மே 13- சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நாளேடு (1925-2024) நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 7.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் சுய மரியாதைச் சுடரொளி ப.சுப்பராயன் நினைவு மேடையில், காந்தி கடை வீதியில் நடை பெற்றது.
மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன், மாவட்ட ப.க தலைவர் துரை.திருநாவுக்கரசு, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் தா. தம்பிபிரபாகரன், மாவட்ட ப.க. வே.ரகு நாதன், பகுத்தறிவுப் பாடகர் செக்கடிகுப்பம் காத்தவராயன், பொதுக் குழு உறுப்பினர் வெ.கீதா ஆகியோர் முன்னிலை ஏற்க மாவட்ட துணைத் தலைவர் க.திருநாவுக்கரசு வரவேற்றார்.
மாவட்ட அமைப்பா ளர் சே.வ.கோபண்ணா தலைமையில் தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஆ.கு. மணி, காங்கிரஸ் கட்சி மாநில துணை செயலா ளர் ரங்க. பூபதி, மனித நேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சையத் உஸ்மான், விசிக மாவட்ட செயலாளர் அ.ஏ.தனஞ்செயன் ஆகி யோரின் கருத்துரைகளோடு அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் வழக் குரைஞர் சு.மழைமேனி பாண்டியன் வாழ்த்து ரையை அவரின் மகள் மதிவதனி வாசித்தார்.
கழகத்தின் மாநில துணைப் பொதுச் செய லாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்பு ரையில், “கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்” என்ற வள்ளுவனின் வாய் மொழிக்கேற்ப விரும்பி யோர் விரும்பாதோரை யும் வழியே செல்வோரை யும் ஈர்த்த அவரின் உரை நூற்றாண்டு விழாவை சிறப்பாக்கியது.
இவ்விழாவில் பழங் குடி மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் சுட ரொளி சுந்தரம், திண்டி வனம் மாவட்ட தலைவர் இர.அன்பழகன், திண்டி வனம் மாவட்ட செய லாளர் செ.பரந்தாமன், விழுப்புரம் நகர செயலா ளர் ச.பழனிவேல், செஞ்சி ஒன்றிய அமைப்பாளர் சுரேசு, திருநாவலூர் ஒன் றிய தலைவர் இராவ ணன், திண்டிவனம் மாவட்ட ப.க தலைவர் நவா.ஏழுமலை, திண்டி வனம் மாவட்ட அமைப் பாளர் வில்லவன்கோதை, திண்டிவனம் நகரத் தலை வர் உ.பச்சையப்பன், மயி லம் ஒன்றிய செயலாளர் ச.அன்புக்கரசன், திண்டி வனம் மாவட்ட இளைஞ ரணி தலைவர் மு.ரமேசு, ஆ.துரை ஆகியோர் பங் கேற்று சிறப்பு செய்ய, செஞ்சி நகர கழகத்தின் சார் பாக தா.நந்தகுமார் நன்றி கூற சிறப்புடன் நூற்றாண்டு விழா நிறை வுற்றது.