ஆவடி – விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதா? கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பைப் பதிவு செய்வோம்! டி.கே.எஸ்.இளங்கோவன் கடும் கண்டனம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 13-– தி.மு.கழக செய்தித் தொடர்புத் தலைவரும், ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச. தலைவரு மான டி.கே..எஸ்.இளங்கோவன் விடுத் துள்ள அறிக்கை ஒன்றில்,
ஆவடி திண் ஊர்தித் தொழிலக வளா கத்தில் அமைந்துள்ள விஜயந்தா மாடல் பள்ளியை மூடுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
எச்விஎஃப் (பிக்ஷிதி) தொழிற்சாலைக்கு எப்போதெல்லாம் பிரச்சினை ஏற்படு கிறதோ அந்த நேரத்தில் ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச. தலையிட்டு அதனை சரி செய்து இருக்கிறது என்பது வரலாறு. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்தி எச்விஎஃப்க்கு வராமல் நீண்ட காலமாக இழுத்தடித்துக் கொண்டிருந்த போது உடனடியாக மேனாள் பாது காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோ ரிடம் நேரில் வலியுறுத்தி எச்விஎஃப் உற்பத்திக்கான ஆர்டரை பெற்றோம்.மரு. கலாநிதி வீராசாமி எம்பி அவர்கள் சுமார்7500 கோடி மதிப்பிலான விஙிஜி-விகிஸிரி-2 உற்பத்தியை எச்விஎஃப் க்கு கொண்டு வந்தார்.
தற்பொழுது பிரச்சினை எச்விஎஃப் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதற்காக ஆவடியில் இருக் கும் மக்கள் தாமாக முன்வந்து எச்விஎஃப் தொழிற் சாலைக்கு நிலங்களை வாரி வழங்கினார்கள். அதற்காக எச்விஎஃப் நிர்வாகம் எச்விஎஃப் தொழிலாளர்களின் பிள்ளைகள் மற்றும் இந்த சுற்று வட்டா ரத்தில் இருக்கும் மக்கள் பயனடையவும் பல கல்விக் கூடங் களைஉருவாக்கினார்கள்.

அதில் முக்கியமானது எச்விஎஃப் ஆங்கில வழிக் கல்வி (இங்கிலீஷ் மீடியம்) சொசைட்டியானது நமது எச்விஎஃப் தொமுசசங்கத்தின் முழு முயற்சியால் உருவாக்கப்பட்டு அதில் சிஙிஷிணி பாடத் திட்டத்தின் கீழ் விஜயந்தா சீனியர் செகண் டரி பள்ளியும், மாநில பாடத்திட்டத்தின் கீழ்விஜயந்தா மாடல் பள்ளியும் நிறுவப் பட்டது
தற்பொழுது இந்த மாடல் பள்ளியை மூட பதினோராம் வகுப்பிற்கான வாங்கிய சேர்க்கை விண்ணப்பத்தை மறுபடியும் திருப்பித் தர மாடல் பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் மாடல் பள்ளியை சிபிஎஸ்இ பள்ளியாக மாற்றுவதாகவும் தமிழ் வழி கல்வியை கை விடுவதாகவும் தெரிவித் திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி மட்டுமல்ல துரோகம் ஆகும்
கடந்த 27 ஆண்டுகளாக 100% தேர்ச்சி மற்றும்இந்த ஆண்டு 100% தேர்ச்சி, 90 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி, 15 பேர் முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண், ஆசிரியரே இல்லாத காமர்ஸ் பாடத்தில் 3 பேர் நூற்றுக்கு நூறு என்று மாநில பாடத்திட்டத்தில் கீழ் விஜயந்தா மாடல் பள்ளி சாதனைபடைத்துள்ளது. இதில் படித்த மாணவர்கள் பலர் ஒன்றிய, மாநில அரசுத் துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கின்றனர்.
இப்படி சாதனை படைத்த பள்ளியை ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் கொண்டு வருவதற்கு துணையாக மாநிலக் கல்வி முறையை மாடல் பள்ளி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மாடல் பள்ளியில் புதிதாக வகுப்பறைகள்கட்டித் தருகிறேன் என்று மாணவர்களிடம் கட்டட நிதியை மாடல் பள்ளி நிர்வாகம் பெற்றிருக்கிறது. ஆனால் புதிய வகுப்பறை கள் ஏதும் கட்டாமல் அவ்வாறு பெறப் பட்ட நிதியில் சுமார் 30 லட்சத்தை இந்த நிர்வாகம் கையாடல் செய்து வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி இருக்கிறது. இவற்றையெல்லாம் மறைக்கவே மாடல் பள்ளியை மூடும் நாடகம் அரங்கேறி வருகிறது

இதனை திராவிட முன்னேற்றக்கழகமும் ஆவடி திண் ஊர்தித் தொழிலக தொ.மு.ச.வும் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்தபோக்கை உடனடியாக கைவிட்டு மீண்டும் மாடல் பள்ளியை மாநில வழியில் மாணவர்கள் பயில 11 ஆம் வகுப்பு சேர்க்கையை உடன டியாக ஆரம்பிக்க வேண்டும் என எச்விஎஃப் நிர்வாகத்தை கேட்டுக் கொள் கிறேன். பிக்ஷிதி நிர்வாகம் தன்னை திருத்திக் கொள்ளவில்லை எனில் கிக்ஷிழிலி முன்பு அறவழிப் போராட்டத்தை திராவிட முன் னேற்றக் கழகமும் தொழிலாளர் முன் னேற்ற சங்கமும் இணைந்து போராட் டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ் நிலைக்கு செல்ல வேண்டி இருக்கும் என்று நான் எச்சரிக்கிறேன்.
ஆகவே, இதைக் காணும் தொழிலா ளர்கள், உடன்பிறப்புகள், மேனாள் மாண வர்கள் தன் ஆர்வலர்கள் மற்றும் ஆவடி பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அனை வரும் ஆவடி திண் ஊர்தித்தொழிலக தொ.மு.ச.-வுடன்இணைந்து கையெழுத்து இயக்கம் நடத்தி நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். -இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *