திருவண்ணாமலை,மே 13- திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் 12.5.2024 அன்று காலை 11 மணிக்கு மாவட்டத்தலைவர் சி.மூர்த்தி தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு.இரா.குண சேகரன் பங்கேற்று அறிவுலகப் பேரா சான் தந்தை பெரியாரின் இலட்சியங் களை நிறைவேற்றிட ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய தொண்டினையும், விடுதலையால் நாம் வெற்றிகண்ட வரலாற்று நிகழ்வுகளை யும் எடுத்துக்கூறி தொடக்கவுரையாற் றினார்.
மாவட்டச்செயலாளர் மு.க.இராம் குமார், பொதுக்குழு உறுப்பினர் முன்பு.சானகிராமன்,போளூர் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.பலராமன், மாவட்ட ப.க.தலைவர் பா.வெங்கட்ராமன், மாவட்ட ப.க.செயலாளர் பல.இராம செயம், போளூர் நகர செயலாளர் தா.சுந்தரமூர்த்தி, பெரியார் பெருந் தொண்டர்கள் கோ.தேவராசு, மு.அ. திராவிடப்பழனி, கீழ்கச்சிராப்பட்டு த.கிருட்டிணன்,ஆகியோர் கருத்துரை வழங்கியதுடன், ஒவ்வொருவரும் அய்ந்து சந்தாக்கள் சேர்த்து தருவோம் என்று உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்றுக்கொண்டார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் கட்டளையை ஏற்று 50 விடுதலை சந்தாக்கள் சேர்த்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா வினை திருவண்ணாமலை, போளூரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.