விருத்தாசலம், மே 13- கழக விருத் தாசலம் கழக மாவட்ட கலந் துரையாடல் கூட்டம்12-.5.-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.
விருத்தாசலம் எம்எஸ்ஜி வளாகத்தில் நடைபெற்ற கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செய லாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் தலைமை உரையாற்றினார்.
விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர் அ.இளங் கோவன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன் முடி, காப்பாளர் வை. இள வரசன், பொதுக்குழு உறுப்பி னர் தங்க.ராசமணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
முன்னதாக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரை வழங் கினார். அப்போது, கூட்டத் தின் நோக்கம் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தலைவரின் பணிகள் குறித்தும், விடுதலை இதழின் தாக்கம் குறித்தும் பேசி சந்தா திரட்டுவதின் முக்தியத்துவம் குறித்து விளக்கினார்.
கூட்டத்தில், விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கே பால முருகன், ஒன்றிய செயலாளர் கா. குமரேசன், நல்லூர் ஒன்றிய தலைவர் ந.சுப்ரமணியன், விருத் தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், நகர அமைப் பாளர் சு. காரல்மார்க்ஸ், விருத் தாசலம் ஒன்றிய அமைப்பாளர் செ.ராமராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.சிலம் பரசன், சுதாகர், திட்டக்குடி ஆனந்த், பரவளூர் அ.பாலச் சந்தர், இராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள்
24.3.2024 அன்று தஞ்சை யில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது, உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இன உரிமை மீட்பு ஏடான விடுதலைக்கு விருத்தா சலம் கழக மாவட்ட சார்பில் நூறு விடுதலைச் சந்தாகளை திரட்டி வழங்குவது, சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா – குடி அரசு ஏடு நூற் றாண்டு விழா கூட்டங்களை மாவட்டம் முழுவதும் பரவ லாக நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.
கூட்டத்தின் நிறைவில் சின்ன வடவாடி கா.அறிவழ கன் நன்றி கூறினார்.